உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சோங் பியாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Designations
தெரியப்பட்டது31 சனவரி 2003
உசாவு எண்1289[1]
தஞ்சோங் பியாய்
Tanjung Piai
தஞ்சோங் பியாய் முனை
தஞ்சோங் பியாய் முனை
தஞ்சோங் பியாய் is located in மலேசியா
தஞ்சோங் பியாய்
      தஞ்சோங் பியாய்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°15′58″N 103°30′39″E / 1.26611°N 103.51083°E / 1.26611; 103.51083
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்பொந்தியான் மாவட்டம்
நகரத் தோற்றம்1850-களில்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
81xxx
வாகனப் பதிவெண்கள்J

தஞ்சோங் பியாய் என்பது (மலாய்: Tanjung Piai; ஆங்கிலம்: Tanjung Piai; சீனம்: 丹绒比艾) மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பொந்தியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் தென்முனையில் ஐரோப்பா; ஆசியா கண்டங்களை இணைக்கும் ஐரோவாசியாவின் (Eurasia) தென்முனை நிலப் பகுதி இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளது.

காட்டு மரங்களால் கட்டப்பட்ட படகுத் துறைகள்; அரிதான கடற்கரையோரச் சூழல்; மற்றும் மாசு மறுவற்றச் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படுகிறது.

தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம் பொந்தியான் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருந்து சிங்கப்பூர் தீவையும்; ஜொகூர் நீரிணையையும் முழுமையாகப் பார்க்க இயலும். [2]

பொது

[தொகு]

தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா (Tanjung Piai National Park) எனும் ஓர் அழகிய வனப்பூங்காவை இங்கு அமைத்து இருக்கிறார்கள்.[3]

தஞ்சோங் பியாய் கடலோரச் சதுப்புநிலம், அனைத்துலக அளவில் ஒரு முக்கியமான ராம்சார் தளமாகும். ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிப்படுத்த இந்த இடம் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[4]

நிலவியல்

[தொகு]

மலேசியாவின் ஐந்து ராம்சார் தளங்களில் ஒன்றான தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா, தேசிய அளவில் முக்கியமான இயற்கைத் தளமாகும். ஜொகூர் தேசிய பூங்கா கழகத்தினால் உருவாக்கப்பட்ட மூன்றாவது பூங்காவாக அறியப்படுகிறது.

மீன்வளத்திற்குப் பெயர் பெற்ற இந்த இடம் 2006-ஆம் ஆண்டில் 32,360 பார்வையாளர்களை ஈர்த்தது. தேசிய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முன்னுரிமைத் தளமாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.[5]

தஞ்சோங் பியாய் சுற்றுச்சூழல் சின்னம்

[தொகு]

2001-ஆம் ஆண்டில், 'ஆசியா கண்டத்தின் தென்கோடி நிலத்தை' குறிக்கும் வகையில் சாம்பல் நிறத்தில், இங்கு ஒரு மைல் கல் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சூழல் நட்பு மைல்கல் 20 மீ. உயரமும் 10 மீ. அகலமும் கொண்டது.

ஜொகூர் மாநில அரசாங்கத்தால் கட்டப்பட்டது. தஞ்சாங் பியாய் நகரத்தின் அடையாளமாகக் கருதப் படுகிறது. மைல்கல்லின் சாம்பல் நிறம் இங்குள்ள சதுப்புநில காடுகள் மற்றும் அதன் சேற்று சமவெளிகளின் செழுமையைப் பிரதிபலிக்கின்றது.[6]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tanjung Piai". Ramsar Convention Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  2. "Tanjung Piai - Johor National Parks - From a geographical perspective, Tanjung Piai (lit. Cape of the Golden Leather Fern) occupies a very special corner of the world". Johor National Parks Corporation. 25 October 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
  3. National Park, Tanjung Piai (4 May 2016). "Tanjung Piai National Park". Official Portal of Pontian District Council (MDP) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  4. "Tanjung Piai Ramsar site draws international nature lovers". youth.bernama.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  5. "Tanjung Piai, Pontian, Johor, Malaysia". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
  6. "Guardian of vital natural heritage". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_பியாய்&oldid=4056044" இலிருந்து மீள்விக்கப்பட்டது